தமிழில் ராம் இயக்கத்தில் ‘பேரன்பு’ திரைப்படத்தில் நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, தற்போது அங்கு ‘மதுர ராஜா’ என்கிற படத்தில் மாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

தமிழ் வசனங்கள், தமிழ் நடிகர் ஜெய் என இப்படத்தில் தமிழக ரசிகர்களுக்கான அம்சங்களும் ஏராளமாக உள்ளன. படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியிருக்கிறது.

இதன் முதல் காட்சியிலேயே தமிழில் வசனம் பேசியிருக்கும் மம்மூட்டி, இறுதியாக ‘ராஜா சொல்றத தான் செய்வான், செய்றத மட்டும் தான் சொல்வான்’ என தமிழக சூப்பர் ஸ்டாரின் வசனத்தை பேசியிருக்கிறார்.

2010-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘போக்கிரி ராஜா’ படத்தின் தொடர்ச்சியாக இப்போது ‘மதுர ராஜா’ வருகிறது.