புலி, இருமுகன் போன்ற படங்களைத் தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சிந்துபாத் வரும் மே 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன்பிறகு எஸ்.பி. ஜனநாதன், மணிகண்டன், சீனு ராமசாமி ஆகியோரின் இயக்கத்தில் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில், ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்துக்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இதனை முக்கியமான இயக்குநர் உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் இதுபற்றிய தகவல்கள் தெரியவரும்.