2017-ஆம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை எட்டி சாதனை படைத்துள்ளது.

 

அட்லீ இயக்கிய இப்படத்தில் சமந்தா, எஸ்.ஜே. சூர்யா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ‘மெர்சல்’ பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

 

மெர்சல் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை தொடர்ந்து ஏராளமானோர் யூ டியூபில் பார்த்து வருகின்றனர்.

 

குறிப்பாக ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை மட்டும் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனை ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.