தண்ணீர் பஞ்சம் பற்றி பேசுகிறபோது மனிதர்களுக்கு ஏற்படும் இடர்களை நாம் சிந்திக்கும் அளவு பிற உயிரினங்களுக்கு நேரும் அழிவை சிந்திக்கிறோமா? அல்லது மனிதர்களுக்கு இடையே தண்ணீர்  யுத்தம் நடப்பது போல விலங்குகளுக்கு இடையேயும் நடக்கும் என்பதைத்தான் நாம் யோசித்திருக்கிறோமா?

மத்தியப் பிரதேசத்திலுள்ள ஜோஷி பாபா வனப் பிரதேசத்தில் வசித்த 15 குரங்குகுகள் நீரின்றி வெப்பத்தாக்குதலில் இறந்து போயியுள்ளன. அக்குரங்குகள் அருகில் உள்ள நீர் நிலையை தாகத்துடன் தேடிச்சென்றபோது அங்கு ஏற்கனவே இருந்த வேறொரு குரங்குக் கூட்டம் அதை அனுமதிக்கவில்லை.  இதனால் நீரருந்த வந்த குரங்குகள் தாகத்தில் பரிதாபமாக இறந்தன.

அக்குரங்குகள் ஏதேனும் நோய் வாய்ப்பாட்டு இருந்திருக்கலாம் என நினைத்து இறந்த குரங்குகளின் அழுகிய உடல்களை எரித்ததாக வன இலாகா அதிகாரிகள்தெரிவித்தனர்

இதுபற்றி மாநில வன இலாகா அதிகாரி பி‌.என் மிஸ்ரா கூறுகையில்,  “அவற்றின் உடல்கள் அழுகத் தொடங்கின. மற்ற குரங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக  இறந்த குரங்குகளை எரித்தோம்” என  தெரிவித்தார். மேலும் அவர் “அருகிலுள்ள நீர் நீர் நிலையை அங்கிருந்த குரங்குக் கூட்டம்  நீரைக் குடிக்கவிடாமல் விரட்டியடித்தன. தாகத்தின் காரணமாகவும் கடுமையான வெயிலின் காரணமாகவும் அவை இறந்திருக்கலாம்.” என்றார்.

“நாங்கள் எல்லா விலங்குகளுக்கும் தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்தியுள்ளோம், மேலும் இறந்த குரங்குகளின் மரணத்திற்குச் சரியான காரணத்தை அறிந்துகொள்ள அவற்றின் உடல்களை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம்” என்றும் மிஸ்ரா தெரிவித்தார்.

மாறிவரும் பருவநிலை விலங்குகளைத்தான் முதலில் தாக்குகிறது. உயிர்வாழ்தல் பொருட்டு அவ்விலங்குகளின் இயல்பான தன்மை மாறுகிறது. வறட்சியின் , வனங்கள் அழிவதன் துயரத்தை மனிதர்களுக்கு முன் இயைற்கையோடு இயைந்து வாழும் பிற உயிரங்களே முதலில் அனுபவிக்கின்றன