இன்று (ஜூன் 8) இரவு டவுண்டனில் நடைப்பெறவுள்ள உலகக்கோப்பை தொடரின் 13ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதுவரை ஒரு வெற்றிக்கூட பெறாத குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும்,  2ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான முகமது ஷேசாத் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளது. இந்த அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டு வருகிறது. தற்போது இந்த அணி முதல் வெற்றியை பெரும் முனைப்பில் தயாராகி வருகிறது. நியூசிலாந்து அணியை சமாளிக்க ஆப்கானிஸ்தான் சிரமத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

இந்நிலையில், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேம் வில்லியம்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் பந்தாடியது. மேலும், இந்த அணி தங்கள் வெற்றி பயணத்தைத் தொடர அதிக ஆர்வம் காட்டும் என நம்பப்படுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.

அணி விவரம்:

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.
ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜஜாய், நூர் அலி ஜட்ரன், ரமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி, முகமது நபி, குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், ரஷித் கான், தவ்லத் ஜட்ரன், ஹமித் ஹசன், முஜீப் ரகுமான்.