கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 37
30/04/2020,  வியாழன்
நண்பகல் மணி 12: 00

இரண்டு அகால மரணங்கள் மனத்தை லேசே உலுக்கியது.  சர்வதேச நடிகர் இர்ஃபான் கான் மற்றும் 70 களின் கனவுக்கண்ணனாக இருந்த ரிஷிகபூர்.

இருவருமே புற்றுநோயால் மும்பையில் இறந்திருக்கிறார்கள் !இர்ஃபான்கானைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் டிவி விளம்பரங்களைத் தாண்டி அவரை நான் பார்த்ததில்லை என்பது எனக்கு இழுக்குதான்.  இருந்தபோதிலும் அவர் முதன்முறையாக தனக்கிருக்கும் அரியவகை புற்றுநோய் பற்றி அறிந்தபோது எழுதிய மடல் என்னை பெரிதும் கலங்கச் செய்துவிட்டது !

அவருடைய வாழ்வின் அந்திம நாட்கள்தான் எத்துணை கொடூரமானது ?  போன வாரம் சொந்த ஊரான ராஜஸ்தானில் இறந்த தன் தாயாரின் இறுதிச்சடங்கில் இந்தக் கொரோனா ஊரடங்கால், அவரால் கலந்துக் கொள்ள இயலவில்லை.  அந்தச் சோகத்தின் சுவடு கூட மறையவில்லை, அவர் தாயைப் பார்க்க கிளம்பி விட்டார்.  எப்பேற்பட்ட மனிதர் ?  அவருடைய இறுதி யாத்திரையில் பத்து பேர் கூட இல்லை.  ரசிகர்களாலும், சக நடிகர்களாலும் இப்போது என்ன பங்களிப்பு செய்துவிட முடியும் ?

வினோத் கன்னாவின் இறுதிச் சடங்கில் இளந்தாரி பாலிவுட் நடிகர்கள் எவருமே பங்கேற்காததைக் கண்டு கொதித்தெழுதியிருக்கிறார் ரிஷிகபூர்.  சீனியர்களை மதிக்கத் தெரியாத நீங்களெல்லாம் என்ன சாதித்து விடப் போகிறீர்கள் ?  நாளை நான் செத்தாலும் எனக்கும் இதேதான் நிகழுமென நன்கு தெரியும் என்றிருக்கிறார் !

தீர்க்கதரிசி ரிஷிகபூரின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள அவருடைய மகளால் கூட வரவியலவில்லை.  எவ்வளவு முயன்றும் அந்த நட்சத்திரக் குடும்பத்தால், இந்த ஊரடங்கில் மும்பைக்கு விமானத்தில் பயணிக்க நடுவண் அரசு அனுமதிக்கவில்லை.  அவருடைய மகள் தன் குடும்பத்துடன் காரில் மும்பை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறார்.  அந்த நெடும் பயணம் முடியும் வரையெல்லாம் காத்திருக்காமல், இர்ஃபான்கானுக்கு வந்ததைப் போல சொற்பமான மனிதர்களுடன் அவருடைய பயணம் பூமியில் நிறைவுற்றது !

இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புவரை கூட, மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே வலியுடன், ரசிகர்கள், உறவுகளுடன் செல்ஃபி, டிக் டாக், வீடியோ என அனைவரையும் மகிழ்வித்துச் சென்ற மனதுக்குச் சொந்தக்காரர் ரிஷிகபூர் !

கொரோனா கொடுங்காலம் நிறைவுற்றதும் இருவருக்கும் சேர்த்து உரிய மரியாதையை மராட்டிய அரசு செய்யுமென மனதார நம்புகிறேன் !

அந்திமாலை மணி 06 : 30

பல இழி செயல்களை தொடர்ந்து நடுவண் அரசு அரங்கேற்றி வருவதாக நேற்று புலம்பினேன் அல்லவா ?  அதிலொன்று அனைத்து வகை பல்கலைக்கழக கலைப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு நடத்தி, மாணவர்களைத் தேர்வு செய்யுமாறு பரிந்துரைத்திருக்கிறது டெல்லியிலிருக்கும் பல்கலைக்கழக ஆணையக் குழு !

உத்திரப் பிரதேசத்தில் பல இடங்களில் மருத்துவர்கள், கொரோனோ தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக ஒரு திடுக்கிடும் செய்தியை வாசித்தேன்.  சேவை மனப்பான்மை கொண்டோருக்கான அந்தப் படிப்பை முழுக்க வணிகமயமாக்கி, பயிற்சிக்கும், போலியான ஆட்களை வைத்து அதில் தேர்வாகவும்,  பல கோடி செலவு செய்ய வைக்கும், மோசமான அடிப்படை கொண்ட இந்த நீட் தேர்வு மூலம் மருத்துவராகும் ஒருவனுக்கு எப்படி சேவை மனப்பான்மை இருக்கும் ?  போட்ட காசை எடுக்கவும், ரிஸ்க் இல்லாமல் அதாவது நோகாமல் தின்னத்தானே ஆசை வரும் ?  அவன் ஏன் எளியோர்க்கும், எப்படி இதுபோன்ற கொடூர தொற்றுப் பரவல்களின் பொழுதுகளிலெல்லாம் உதவ நினைப்பான் ?

விதைத்த கோடிக்கணக்கான பணத்தை அறுவடை செய்ய அவன் பல வருடங்கள் இங்கு நலமுடன் வாழ்ந்தாக வேண்டுமே ? அவன் சிந்தனை அந்த சுயநலத்தை மட்டும்தானே சிந்திக்கும் ?  அதனால்தான் இங்கு நீட் நுழைய யோசனை தெரிவித்த மாத்திரத்திலேயே கடுமெதிர்ப்பு பல திசைகளிலிருந்தும் கிளம்பியது.  அதில் தற்காலிகமாகத் தோற்றாலும் கூட,  அந்தக் கோபம் நீறு பூத்த நெருப்பாய் கணன்றுக் கொண்டுதான் இருக்கிறதேயொழிய அணைந்துப் போய்விடவில்லை !

சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படிக்ககவல்ல மருத்துவப் படிப்புக்கே தகுதித் தேர்வு தேவையில்லை எனச் சொல்லும் மண்ணில், பல லட்சம் பேர் படிக்கக் கூடிய கலை படிப்புகளுக்கு கூட நீட் வைத்து, கழித்துக் கட்ட எண்ணும் நடுவண் அரசின் கயவர்களுடைய ஆசையைப் பலிக்க விடுவோமா ?

ஒட்டுமொத்த மனங்களும் சோர்ந்து போயுள்ள இந்தப் பொழுதில், அடி மேல் அடியாய் கொடுத்து, ஒரேயடியாய் அடிமைகளாக்கி விடலாம் என பகற்கனவு காண்கிறார்கள்.  மிக ஆவேசமான எதிர்வினைகள் முரட்டு மூடர்களை பஸ்பமாக்கக் காத்திருக்கிறது !

மற்றொன்றுதான், 68000 கோடிகள் வரை கடன் ஒத்திவைப்பு அல்லது தள்ளுபடி அல்லது ஸ்வாஹா.  எல்லா எழவுக்கும் ஒரே அர்த்தம்தான்.  சங்கிகளைக் கேட்டால் வங்கி நடைமுறையில் writing off எனப்படுவது இழப்பாகாது.  கணக்கிலிருந்து நீக்கப்படுவதாகும், இது மன்மோகன் சிங் காலத்திலும் நிகழ்ந்ததுதான் என முட்டுக் கொடுத்தவண்ணமிருந்தனர்.

ஆனால் இதுவரை Writing Off செய்யப்பட்டிருக்கும் ஆறரை லட்சம் கோடிகளில், ஐந்தே கால் லட்சம் கோடிகள், கடந்த ஆறு ஆண்டுகளில் செய்யப்பட்டவையாம்.  அதாவது கிட்டத்தட்ட 80 % தொகை, மறைந்த திரு.அருண் ஜேட்லி & சீ. நிர்மலாவால் தள்ளுபடி செய்யப்பட்டவையாகும் !

உச்ச கொடூரம் என்னவெனில் அதிக கடன் வாங்கி செலுத்தாதோர் பட்டியலில் டாப் 50 -ல் இருப்பவர்களில் பலர் குஜராத்திகள்.  அதில் பலர் வைர வியாபாரிகள்.  இன்னும் பலர் மார்வாடிகள் மற்றும் வட இந்தியர்கள்.  டாப் 50 ல் ஒரே ஓர் இஸ்லாமியர் இல்லை.  ஒரே ஒரு எஸ் சி இல்லை எஸ் டி இல்லை, பி சி இல்லை.  எல்லாம் ஆண்டாண்டு காலமாய் நம் மண்ணையும், மக்களையும் சுரண்டி வாழ்ந்துக் கொளுத்த முற்பட்ட வகுப்பைச் சார்ந்த கும்பல்.  ஒவ்வொருத்தனும் பல ஆயிரம் கோடிகளுக்கு மேல் கடன்களை வங்கிகளில் வாங்கி உல்லாச வாழ்வு வாழ்ந்துவிட்டு, நெருக்கடி வரும் என்கிற நிலையில், நடுவண் அரசின் முக்கியச் சக்திகளுடைய ஆசியினால் வெளி நாடுகளுக்குத் தப்பித்து ஓடியவர்கள் !

மல்லைய்யா, நிரவ் மோடி போன்றவர்கள் மன்மோகன், ப.சிதம்பரம் ஆட்சி காலங்களிலிருந்தே கடன் பெற்றவர்கள்தான், ஆனால் அவர்கள் கடனையும் கட்ட முடியாமல், தொழிலும் முடங்கி, வெளிநாட்டுக்கு தப்ப ஓட வழிவகுத்தவர்கள் மோடி & கோதான்.  ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள், ஊழலாகவே வாழ்ந்துக் கொண்டிருப்பதுதான் நாட்டுக்குப் பிடித்த கொரோனா தொற்று.  மக்களுக்கு சிந்தனைத் திறன், பகுத்தறிவு போன்ற தடுப்பு மருந்துகள் கேடயம் கொண்டே இந்தத் தொற்றை நாட்டை விட்டே நீக்க முடியும், காத்திருப்போம் !!!

 

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்