அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒரே நாளில் அதுவும் இரண்டு மணி நேரங்களில் ஒன்பது நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தேடிய நில அதிர்வியல் மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நில அதிர்வு, எரிமலை வெடிப்பு, சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் சிறிய தீவுகள், தீவுக்கூட்டங்களில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில்  அந்தமான் நிகோபார், சுமத்ரா தீவுகளில் அடிக்கடி நில அதிர்வு உண்டாவது சகஜம்தான். ஆனால் ஒரே நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுவது அரிதானது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், “அந்தமான் நிகோபார் தீவுகளில் , 4.7-5.2 வரையிலான ரிக்டர் அளவுகளில் ஒன்பது நிலநடுக்கங்கள்  ஏற்பட்டு உள்ளன. முதல் அதிர்வு (4.9 ரிக்டர்) அதிகாலை 5. 14 மணிக்கு ஏற்பட்டது. இரண்டாவது நில அதிர்வு 2 நிமிடங்கள் கழித்து ஏற்பட்டது (5 ரிக்டர்).  6.54 மணிக்கு ஏற்பட்ட நில அதிர்வு கடைசி அதிர்வாகும் (5.2 ரிக்டர்).  இதுபோல ஒரே நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட  நில அதிர்வுகள் ஏற்படுவது அரிதானது. நில அதிர்வை வரும் முன்னரே கணிப்பது மிகக் கடினமான ஒன்று. இதுகுறித்த ஆராய்ச்சிகள்  நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஹவாய் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு உலக கவனம் பெற்றது. மனிதர்கள் இதுபோன்ற தீவுகளை தங்கள் விடுமுறையை கழிக்கும் உல்லாசத் தலமாக மாற்றி வைத்துள்ளனர். செல்வந்தர்கள் ஹவாய் தீவில் ஹாலிடே ரிசாட் கட்டி வருடம் ஒருமுறை அங்கு விடுமுறையை கொண்டாடுவர். தீவிகளை விலைக்கு வாங்கும் கோடீஸ்வரர்களும் உள்ளனர்.

பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுபோன்ற நிலநடுக்கங்களால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன, இதனால் அனைவரும் பதற்றத்தில் உள்ளனர்.   நில அமைப்பியல் வல்லுநர்கள் கண்டறிந்துவிட்டால் பல உயிர்களை காக்க முடியும்.