சிற்றோடை மீன்கள் (7)

பூமா ஈஸ்வரமூர்த்தி

1985 ல்” ஆஸாத் கி ஒர் “என்ற ஹிந்திப்படம் விருது வென்றது.அது எச் பிரகாக்ஷ் என்பவர் இயக்கியது. பின் 1986 ல் நரசிம்மன் என்பவர் இயக்கிய” சுவாமி “என்ற ஹிந்தி திரைப்படம் விருது வென்றது.

***                                                                                    ***

MANU UNCLE

இது மலையாள திரைப்படம் 1988 ல் சிறுவர்களுக்கான பிரிவில் தேசிய விருது பெற்ற படம். இதை தயாரித்தது ஜாய் தோமஸ். மேலும் இயக்குநர் டென்னீஸ் ஜோசப்.

மம்முட்டி நடித்த படம். மோகன்லாலும் உண்டு.

ஒரு போலீஸ் குடும்பம்+பக்கத்து வீடு. மொத்த குழந்தைகள் நான்கு பேர்கள்.மனு அங்கிளாக நடிப்பவர்தான் மம்முட்டி.

குழந்தைகள் ஒரு மியூசியத்திற்கு செல்லும் போது மார்த்தாண்டவர்மாவின் வைர கிரீடம் களவு போகிறது. தியாகராஜன் தலைமையில் களவு நடக்கிறது. குழந்தைகளுக்கு சில தடையங்கள் கிடைக்கின்றன.

மம்முட்டி விஞ்ஞான ஆர்வமுள்ளவர். ஆனாலும் அவரை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. அவர் ஒரு நாள் தொலைபேசியில் ஒரு பேச்சை வழி மறுத்து கேட்டதில் மார்த்தாண்ட வர்மாவின் வாளும் திருடு போவதாக அறிகிறார். பக்கத்து வீட்டு போலீஸ் அதிகாரியை அழைத்துச் செல்கிறார். திருட்டை தடுக்க நினைக்கும் பணியில் போலீஸ் அதிகாரி குரூரமாக கொலை செய்யப் படுகிறார். கொலை செய்ய பயன் படுத்திய லாரியில் தற்செயலாக ஏறி அமர்ந்த சைக்கிள் திருடும் மற்றுமொரு சிறுவன் நேர்ந்த படுகொலைக்கு நேரடி சாட்சி.

சைக்கிளை பறி கொடுத்த குழந்தைகள் அந்த சைக்கிள் திருடனை கண்டு பிடித்ததில் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை நெருங்குகிறார்கள். மம்மூட்டியும் உண்மையான தலைவனை கண்டு கொள்கிறார். அனைவரும் சேர்ந்து திருடர்களை கண்டு பிடித்து போலீஸ் வசம் ஒப்படைக்கின்றனர். இது கதை.

1984 ல் மை டியர் குட்டிச் சாத்தானுக்கு பிறகு 1988ல் தேசிய விருது பெற்ற மலையாள சிறார் படம் கூகுளில் கிடைக்கிறது.

                       ***                                                                                           ***

ANKUR MAINA AUR KABATOOR

இது 1989 ல் வெளியாகி விருது பெற்ற படம். அருமையான படம். இந்த திரைப்படம் பறவை ஆர்வலர் சலீம் அலிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப்படம் ஒரு இந்தோ மொரிக்ஷியஸ் கூட்டுத் தயாரிப்பு.

அழிந்து வரும் PINK PIGEON பறவையினத்தை மீட்க வருகிறார், டாக்டர் சின்ஹா.DODO, BLUE PIGEON. BLACK PARROT பறவையினங்கள் போல இந்த நீலப் புறாவும் அழிந்துவிடக் கூடாதென மெனக்கிடுகிறார். மொரிக்ஷியஸுக்கு அவருடன் வருவது அவரது பேரன் அங்கூர் மற்றும் கங்காதீன் என்ற உதவியாளர். தீவுக்கு வந்த பிறகு அங்கூரோடு மெய்னா என்ற சிறு பெண்ணும் சேர்ந்து கொள்கிறாள்.

மொரிக்ஷியஸ் தீவு வயல் கரும்புத் தோட்டங்கள் அருவி மலைகள் வெண்ணிற அலகள் நுரைக்கும் கடற்கரைகள் என வனப்பு மிகுந்தது

ஊரில் ஜூஜு என்ற மூலிகை வைத்தியம் மற்றும் சிறு தேவதை வழிபடும் ஒரு பெண்.இவரது எதிர்பார்ப்பு யாரும் இயற்கையின் இயக்கத்தில் தலையிடக் கூடாது என்பது.குறைந்து வரும் மரங்களும் பறவையின் கூட்டை அழித்துமுட்டைகளை தின்னும் குரங்குகள் போன்ற விலங்குகளும் பறவைகளின் எதிரிகள் என்று புரபஸர் முடிவுக்கு வருகிறார்.

அதனால் அந்த அரிய வகை புறாக்களை பிடிந்து வந்து நேரடியான கண்பார்வையில் வைத்துக்கொள்கிறார். ஜூஜூவின் பூனை புறாக்களின்,முட்டைகளை குறி வைப்பது கண்டு சில முடிவெடுக்கிறார்அதில் பூனையின் உயிரும் பறவையின் உயிரும் போகிறது ஜூஜூ கோபப்படுகிறாள் என்றாலும் அங்கூருக்கு உடல் நிலை திடீரெனசரியில்லாமல் போகும் போது அவளே காப்பாற்றுகிறாள்.மனித நேயம் உணரப் பெறுகிறது.

அந்த அபூர்வமான பறவைகளின் முட்டைகளிருந்து குஞ்சுகள் வெளிவருகின்றன.

சிறார்களுக்கான திரைப்பட இயக்கம் இயற்கை மற்றும் அபூர்வ பறவை இனங்களில் கவனம் செலுத்த துவங்கியது.

இதுவும் கூகுளில் கிடைக்கிறது.

***                                                                          ***

THE RUNNER FROM RAVENSHED “2010

ஐந்து குழந்தைகள். எல்லோரும் ஒன்பது வயதுக்குள். இவர்கள்தான் கதையின் ஜ்வலிக்கும் நட்சத்திரங்கள்.

ஏழு மாதத்தில் எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு குழந்தைகளுக்கு பின்னும் ஒவ்வொரு சரியான டிரெய்னர் இருந்திருக்க வேண்டும்.

இது ஒரு US படம்.  Little Crew Studios தயாரிப்பு. டைரக்க்ஷன் JOEL STEEGE

சின்னஞ்சிறு குழந்தைகளால் மிகப் பெரிய வேடங்களை ஏற்று நடிக்க முடியும் என்று நிரூபித்த படம்.குழந்தைகள் பெரியவர்களின் உடல் மொழியை ஏற்று நடித்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கான ஒப்பனைகளோடு.

SAM தண்டனை பெற்று Ravenshed க்கு கைதியாக அனுப்பபட்டவள். அவள் அங்கிருந்து தப்புகிறாள். City of refuge guide service அவளுக்கு உதவ முன் வருகிறது. திகில் நிறைந்த படம். இசை அருமையிலும் அருமை.சின்னச் சின்ன சொற்றொடர்களில் கனமான பொருள் பொதிந்த உரையாடல்கள்.தொடர் முயற்சி வெற்றி பெரும் என்பதை படம் சொல்கிறது.

குழந்தைகளோடு நாமும் நம்மோடு குழந்தைகளும் சேர்ந்து பார்க்கப் பட வேண்டிய படம் என்பது மட்டுமல்லாமல் இங்குள்ள ஒவ்வொரு இயக்குநரும் பார்த்தால் நமக்கு நல்லது.

இந்தப் படத்தைப் பார்த்தால்தான் நாம் (இந்தியா) இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவு அதிகமான அதிகம் என்பது புரியும்.

தொடரும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. டோராவின் கனவு தேவதை- பூமா ஈஸ்வர மூர்த்தி
  2. ’ ஸ்டார் வார்ஸ்’படங்களின்  துவக்கம்- பூமா ஈஸ்வரமூர்த்தி
  3. சத்யஜித்ரேயின் குழந்தைகள் உலகம் - பூமா ஈஸ்வரமூர்த்தி
  4. குழந்தைகளின் கனவு மிருகங்கள்- பூமா ஈஸ்வரமூர்த்தி
  5. நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன?-பூமா ஈஸ்வரமூர்த்தி
  6. குழந்தைமையைத் தேடி- பூமா ஈஸ்வரமூர்த்தி