தமிழ்நாடு நீண்ட வேளாண்மை வரலாறு கொண்ட மாநிலம். ஆண்டுக்கு மூன்று போகம் அறுவடை செய்த மாநிலம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விவசாய உற்பத்திப் படிப்படியாக நாசமடைந்து வருவதுடன், விவசாய நிலங்கள் விலை நிலங்களாக மாறி வருவதுடன். நீர்வள வசதியின்மை மற்றும் உயர்ந்து விட்ட பெட்ரோல், டீசல் விலை காரணமாக. விவசாய பொருட்கள் உற்பத்தி விலைக்குக்கூட விற்பனை ஆகாமல். உணவு தானியங்கள் ரோட்டில் கொட்டப்படுகின்றன. மேலும் ஊடுபயிர் என்று அழைக்கப்பட்ட உணவு தானியங்கள் இன்று பணப்பயிராக பரிணாமம் பெற்றுள்ளது.

19ஆம் நூற்றாண்டு தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டு வரையிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் புறக்கணிக்கும் துறையாக விவசாயம் இருந்து வருகிறது.

காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா என சிறப்புவாய்ந்த சட்டசபையின் பட்ஜெட் தாக்கல் நிகழ்வுகள்! என்பது தற்போது வெற்று அறிவிப்புகளை வெளியிடும் சம்பிரதாய இடமாக மாறியுள்ளது.

கடந்த கால ஆட்சிகளில். கல்வித்துறை, விவசாயம், மருத்துவம் என மக்களின் எதிர்கால தேவைகளைக் கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட பட்ஜெட்.

இன்று. வெறும் சாராய வருமானத்தை மட்டுமே நம்பி இயற்றப்பட்டு, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ள நிகழ்வு வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

மேலும் ஆளும் அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்டாக இது இருந்தாலும்! இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு உதவக்கூடிய சிறப்பு செய்திகள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.

வழக்கம்போல தனிநபர் துதிபாடி மற்றும். குறிப்பிட்ட சிலரின் வருமானத்தை உயர்த்தும் நோக்கத்திலேயே ஒரு சில திட்டங்களை அறிவித்துள்ளது மாநில நிதித்துறை.

விவசாயிகள் உடனான மாநில அரசின் சீர்திருத்த முறை, தொழில்துறையின் பொருளாதார கூட்டமைப்பு, அரசுத்துறையில் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, சிறு மற்றும் குறு தொழில்களை உயர்த்த அடிப்படை கொள்கைகள், உற்பத்தி துறைக்கான வளர்ச்சி, மாநில கட்டமைப்பு, தனியார் துறை முதலீடு மற்றும் மூலதன வளர்ச்சிக்கு என அடிப்படை திட்டங்கள் எதுவும் இன்றி.

வருமானம் இல்லாத வெறும் செலவுகளை மட்டுமே அறிவித்து. அடிமை புகழ்பாடி உள்ளது நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசின் இந்த கடைசி பட்ஜெட்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் அதுபற்றி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தனர் டெல்டா விவசாயிகள்.

8 வழிச்சாலை, 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த தடை. குரூப் 4 முறைகேடு, ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று பல்வேறு தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு வெறும் கானல் நீராகவே கரைந்துள்ளது.

அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களால் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களைச் சற்று உற்று நோக்கினால்.! மத்திய அரசுக்கு கூஜா தூக்கும் வேலையை மாநில அரசு சரியாகச் செய்துள்ளதை காணமுடிகிறது.

மத்திய அரசு வழங்கும் உணவு மானியத் திட்டத்திற்கு 6500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், பொது விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்த கூடுதலாக 400 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூர்ந்து கவனித்தால், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின்படி அண்டை மாநிலத்தவர் நம்முடைய பொதுவிநியோக உணவுகளைக் கொள்ளையடித்துச் செல்ல. மாநில அரசு கைக்கூப்பி வரவேற்கிறது 400 கோடி ரூபாய் முதலீட்டில்.

அப்படியெனில், முதலில் ஒதுக்கப்பட்ட 6500 கோடி எதற்காக என்ற கேள்வி இங்கு எழுகிறது? மத்திய அரசு வழங்கும் உணவிற்கான மானியத்தை வீடு கட்டவும் பொது விநியோகத் திட்டத்தின் படி சில்லரை விற்பனையில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் 6,500 கோடி எனும் பட்சத்தில்.! அதிகப்படியான 400 கோடி பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு ஆதரவாகவே, இந்தப் பட்ஜெட்டில் 400 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

27 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திருத்திய நெல் சாகுபடி மற்றும் கரும்பு, சிறுதானிய விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும்.
அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை. கால வரம்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

தொழில்துறைக்கு 2,500 கோடி போக்குவரத்துத் துறைக்கு 2716 கோடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு 153 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தாலும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிஎஃப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லப்படவில்லை. மேலும் தொழில்துறையை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தாலும் கடந்த ஆண்டுகளில் எவ்வளவு தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அறிவிக்க மறந்துவிட்டனர் ஆட்சியாளர்கள்.

அடுத்தபடியாக சுகாதாரத்துறைக்கு 15863 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டடப்பணிகள், நிதி ஒதுக்கீடு, இடம் தேர்வு போன்ற விவரங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

வேளாண்மைதுறைக்கு 11894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாய கடன்கள் மீதான வட்டி விகித தள்ளுபடிகள் மற்றும் விவசாயிகளுக்கான காப்பீடு. பயிர் காப்பீடு போன்ற உயிர்ப்புள்ள திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை.

நெடுஞ்சாலை துறைக்கு 5,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அமைச்சர். ஏற்கனவே தொடங்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ள. எட்டு வழி சாலை திட்டம் பற்றியும். இந்தியாவிலேயே அதிகப்படியான சுங்கச்சாவடிகள் உள்ள தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் சுங்கச்சாவடிகள் நீக்கப்படுவது பற்றியும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுப்பாடுகள் பற்றியும் கூற மறுத்துள்ளார்.

பொதுப்பணித்துறையின் மூலமாக மாநில அரசின் அலுவலக கட்டிட பணிகளை மேற்கொள்ள 1453 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஓ பன்னீர்செல்வம். பொதுப்பணித்துறையில் மலிந்துள்ள ஊழல் விவகாரங்களை கையில் எடுக்காமல் விட்டுவிட்டார். மேலும் மின்சாரத்துறைக்கு 20115 கோடி கொடுக்கப்படுவதாக அறிவித்துள்ள அமைச்சர் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் மின்சார வாரியத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய கடனைப்பற்றி எதுவும் கூறவில்லை.

நீர் மற்றும் அனல் மின்சாரங்கள், காற்றாலை மின்சாரம் போன்றவற்றின் மூலம் எவ்வளவு மின் உற்பத்தி தொடங்க திட்டமிட்டுள்ளது.! அதற்கான முதலீடு மற்றும் செலவு தொகை எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாநில அரசின் வருவாய் 2 லட்சத்து 19 ஆயிரத்து 375 கோடி என்றும், அதேவேளையில் சிறப்பு திட்டங்கள் இலவசத் திட்டங்களுக்காக இந்த அரசு செலவிடப்படும் தொகை 2 லட்சத்து 41 ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்துள்ளது. சுமார் 22 ஆயிரத்து 225 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இறுதி பட்ஜெட்டின் படி. தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை சுமார் 4 லட்சத்து 56 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை. ஒரு வருட காலத்தில் 60,000 கோடி உயர்ந்துள்ளதை எண்ணி எச்சரிக்கை செய்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

பட்ஜெட் தொடங்கி மாநில அரசின் நிதி திட்டங்கள்வரை பற்றாற்குறை ஏற்படும் போதெல்லாம் மதுபான விலையை உயர்த்தினால் ஈடு செய்துவிடலாம் என்ற எண்ணத்திலேயே இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும். அதைத் தவிர வேறு எந்த எதிர்கால திட்டங்களையும் செயல்படுத்த சரியான வரைமுறை இல்லாத மத்திய அரசுக்கு ஒத்து ஊதும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.