சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்திகளைக் கட்டுப்படுத்த மற்றும் அரசு எதிராக பொய்பரப்புரைகளை பகிர்வோரை கண்டுபிடிக்க, ஆபாச பாலியல் போட்டோ மற்றும் வீடியோக்கள வெளிவருவதை தடுத்து கண்காணிக்க என பல முயற்சிகளை தகவல் தொழிநுட்ப அமைச்சகத்துடன் இணைந்து அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

இந்நிலையில்தான் சமூகவலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விரும்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆதார் எண்ணுடன் சமூக ஊடகங்களின் கணக்குகளை இணைப்பதற்கு மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் தேவை என்று மத்திய அரசு கருதுவதாகவும் பொறுமையாக இதை செயல்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது.

ஆதார் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த காலங்களில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் உள்ளதா என்று அண்மையில் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்குப் பதில் தாக்கல் செய்ய உள்ள மத்திய அரசு, ஆதாரை செயல்படுத்தும் தனித்துவ தகவல் சேகரிப்பு ஆணையத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு சட்ட அமைச்சகத்துடனும் ஆலோசனை நடத்தியுள்ளது.

ஆயினும் சமூக வலை கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.