காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் மரணமடைந்தனர். இதற்கு ஜெய்ஷி-இ-முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றது. அதற்குப் பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட் எனும் பகுதியில் இந்திய விமானப்படை ஜெய்ஷி-இ-முகமது அமைப்பின் தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்தது.

ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இன்றுவரை இந்திய அரசும் வெளியுறவுத்துறையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.அதே சமயம் விமானப்படையினரின் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.முதலில் 350 வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தது.ஆனால் பாகிஸ்தான் அரசோ அங்கு எந்தவிதமான தாக்குதலும் நடைபெறவில்லை என அறிவித்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும், அதற்கான ஆதாரஙளையும் வெளியிடுமாறு குரல் எழுப்பின.

இந்தசூழலில்  விமானப்படை தாக்குதலில் 250 பேர் உயிரிழந்ததாக பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமானப்படை தாக்குதலில் பயங்கரவாதிகள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதில் வெளியுறவுத்துறையின் அறிக்கையே அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

இப்போது  ’பிளானட்லேப்’ என்ற செயற்கைக்கோள் காட்சிகளைப் படம் பிடிக்கும் தனியார் நிறுவனம் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் தீவிரவாதிகள் முகாமை கடந்த நான்காம் தேதி செயற்க்கைகோள் மூலம் எடுத்த படத்தை வெளியிட்டது இதில் விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட இடம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இன்று வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் அதேபோல உள்ளது.

மேலும் இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் ஜெஃப்ரீ லூயிஸ் கூறும் போது மிகத்துல்லியமாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் தீவிரவாத முகாம் இருந்த இடத்தில் வெடிகுண்டு  தாக்குதல் நடந்ததற்கான எந்தவொரு ஆதாரம் இல்லையெனக் கூறி உள்ளார்.  இந்தச்செய்தியை, அடுத்து ரியூட்டர்ஸ் எனும் பத்திரிக்கையின் நிருபர் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு நேரடியாகச் சென்று மக்களை சந்தித்ததில் மக்களும் அப்படி எதுவும் நடக்கவில்லை என கூறினர். அதேபோல பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடக்கவில்லை என தொடர்ந்து கூறும் வேலையில் பாகிஸ்தானின் மேஜர் ஜெனரல் ’ஆஷிப் கஃபூர்’ ‘இங்கு தாக்குதல் எதுவும் நடக்கவில்லை,மேலும் அந்த இடத்தில் எந்த விதமான உயிரிழப்போ, நாசமோ எதுவும் நடக்கவில்லை’என கூறினார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதால் மக்களின் கவனத்தை திசைதிருப்பவே பிரதமர் மோடி இது போன்ற பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஏற்கனவே குற்றம்சாட்டி வரும் வேலையில் இந்த புகைப்படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசும் போதும். இந்தியா நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாலேயே இப்படிச் செய்கிறது என குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 

-ரா.ரங்கநாதன்