ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான சி.பி.ஐ வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகையும் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடும் சிபிஐ எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அவர் சிறையிலிருந்து வெளியே வருவதில் சிக்கல்  நீடிக்கிறது. காரணம் இப்போது அவர் சிறையில் இருப்பது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு என்பதே இதற்குக் காரணம்.அந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவர் வெளியே வர முடியும்.

அந்த வழக்கு இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.