மகாத்மா காந்தியை இஸ்லாமியர் வேடத்தில் சுட்டுக் கொன்றவன் சித்பவன பார்ப்பான் என்று தெரிந்தவுடன் மஹாராஷ்டிராவில் பல அக்ரஹாரங்கள் கொளுத்தப்பட்டன. தேடித்தேடி சித்பவன் பார்ப்பனர்கள் கொல்லப்பட்டனர் என்று அப்போதைய மராட்டிய உள்துறை அமைச்சர் மொராஜி தேசாய் சொல்லுகிறார்..

பெரியாரின் தீவிர பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரத்தின் காரணமாக மராட்டியத்தைப்போலவே, தமிழகத்திலும் பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறை நிகழும் என்று பயந்தனர் பார்பனர்கள். முதல்வர் ஓமாந்தூரார் கேட்டுக்கொண்டதன் இணங்க 31.01.1948இல் திருச்சி வானொலி நிலையதில் எங்கும் கலவரம் நடந்து விடக்கூடாது என்று பெரியார் பேசுகிறார்.

மேலும்… இப்பெரியாரின்(காந்தியார்) பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல், மத, இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்துகொள்வதே அவருக்கு நாம் மரியாதை செய்வதாகும்’ என்று 31.01.1948-ல் வெளியான விடுதலை எட்டிலும் எழுதுகிறார்.

மேலும் திராவிடர் கழகத்தின் சார்பில் எல்லா ஊர்களிலும் 29.2.1948 அன்று காந்தியாரின் மறைவுக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்தி இரங்கல் தீர்மானத்தை காந்தியின் மகன் தேவதாஸ் காந்திக்கும், நேருவுக்கும், எல்லாப் பத்திரிகைளுக்கும் அனுப்ப வேண்டும் என்று தன் தொண்டர்களுக்கு கட்டளையும் இட்டவர் பெரியார்..

சன்னாநல்லூர் தி.க பொதுக்கூட்டத்தில் காந்தியைக் கொலை செய்த்த கோட்ஸேவின் குணத்தை, பார்ப்பனர்களின் குணத்தோடு ஒப்பிட்டு பேசும் இளம் தோழரின் பேச்சைப் பாதியில் நிறுத்த சொல்லிய பெரியார்..

“நமக்கு பார்ப்பனியத்தோடதான் சண்டை. தனிப்பட்ட பார்ப்பனர்களோட இல்லை. அப்புறம், நாடு இப்போ இருக்கிற சூழல்ல இப்படிப் பேசலாமா? மக்கள் ஏற்கெனவே கொந்தளிப்புல இருக்கிறப்போ அதைத்தூண்டிவிடுற மாதிரி பேசுறது கலவரங்களை உண்டாக்காதா? சமூகத்தைப் பிளவுபடுத்துறதா நம்ம நோக்கம்?”

“பார்ப்பான் ஒருவன் சுட்டான் என்ற காரணத்திற்காக அந்தப் பார்ப்பனரைத் திட்டிவிடுவதாலோ அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது.” என்று விளக்கமும் சொல்லுகிறார்.

மேலும், சுட்டது பார்ப்பான் அல்ல, சுட்டது கைத்துப்பாக்கி. அதற்காகப் பார்ப்பான் மீது கோபித்துக் கொள்வதாயிருந்தால், அந்த அளவுக்கேனும் அந்தப் பார்ப்பானின் கைக்கருவியாக இருந்த அந்தத் துப்பாக்கியின்மீது நாம் கோபித்துக்கொண்டாக வேண்டும். அதை முதலில் துண்டுதுண்டாய் உடைத்துத் தூள்தூளாக்க வேண்டும். காந்தியாரைச் சுட்டுக்கொல்ல உதவியாயிருந்த துப்பாக்கியின்மீது நாம் எவ்வளவு கோபப்படலாமோ, எவ்வளவு பழிக்கலாமோ அந்த அளவுக்குத்தான் அதை உபயோகப்படுத்திய பார்ப்பான்மீதும் நாம் கோபித்துக்கொள்ள முடியும்; பழிக்க முடியும். அவனைப் பழிப்பதாயிருந்தால் அதே அளவுக்கேனும் அவன் பின்னாடி இருந்துகொண்டு, அவனுக்கு ஆதரவாய் இருந்த மற்றவர்களையும் பழிக்க நாம் சித்தமாயிருக்க வேண்டும். அவனும் அந்தத் துப்பாக்கிபோல், அவர்களுக்கு ஒரு கருவியாக அமைந்துவிட்டான்” என்று 22.2.1948 அன்று வெளியான விடுதலையிலும் எழுதுகிறார்.

பெரியார் பார்ப்பனியம் என்கிற தத்துவத்தை மட்டுமே தான் எதிர்த்தாரே ஒழிய பார்ப்பனர்களை அல்ல.  ஏனென்றால் அவர் பெரியார்..