சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெற்றிபெற்ற அனைத்து திமுக எம்பிக்களும் பங்கேற்றனர்.

முதலில் இவ்வெற்றிய சாத்தியப்படுத்திய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் திமுகவிற்கு வெற்றியை தேடித்தந்ததாக கழகத் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தேர்தலில் பல பொய் பிரச்சாரங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி ஒரு மாபெரும் வெற்றியை திமுக பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மக்களவையின் திமுக தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டனர்.

அத்துடன் மக்களவை கொறடாவாக ஆ.ராசா-வும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் நியமிக்கப்பட்டனர். இதுதவிர மாநிலங்களவைக் குழுத் தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்