காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதி மற்றும் கேரளாவில் வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதில் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, ராகுல் காந்தியை விட 2000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

ஆனால், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார் ராகுல் காந்தி.