விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜுன் 14) காலமானர்.

திமுக எம்.எல்.ஏ. ராதாமணி புற்றுநோய் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாமணி(வயது 67). விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரை படித்துள்ளார். 2016 விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதைதொடர்ந்து, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவராகவும் இருந்தார் ராதாமணி.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர், அண்மையில் வீடு திரும்பினார். ராதாமணிக்கு மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி ராதாமணி உயிரிழந்தார். இவரது உடலுக்குக் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.