அந்தமானில் நள்ளிரவு 12.39 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக,  வடக்கு அந்தமான் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பலர் எச்சரித்த நிலையில், அந்தமான் தீவில் இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் பதற்றம் அடைந்து உள்ளனர். ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவாகி உள்ளது.

அந்தமான் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன, வீட்டில் உள்ள பொருட்கள் பல கீழே விழுந்து உடைந்துள்ளது. நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்ததால் வீடுகளை விற்று வெளியே ஓடி வந்து பயத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.