எங்கள் உணவை திண்றுவிட்டார், முஸ்லிம் இளைஞர் உணவு கொண்டுவரக்கூடாது, சொமட்டோ உடையில் பாலியல் காட்சிகள் என பல சர்ச்சைகளில்மூலம் சொமட்டோ நிறுவனம் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட உணவு டெலிவரி செய்யும் செயலியாக உருவாகியுள்ளது.

நாட்டின் மூலைமுடுக்குகளில் கூட சொமட்டோ நிறுவனம் கிளைகளை பரப்பி தன்னுடைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சொமட்டோ நிறுவனம் மக்களிடையே அன்பை பரப்பும் முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது

இர்ஷாத் தப்தாரி என்ற நபர் சொமட்டோவில் உணவை ஆர்டர் செய்கிறார், அவரது நான்கு வயது மகன், உணவு டெலிவரி செய்யவரும்போது எனக்கு பலூன், கார்கள், பொம்மைகளும் வேண்டும் என்று சொமட்டோவிற்கு மெசெஜ் செய்கிறார்.

இதை இர்ஷாத் தப்தாரி  ட்விட்டரில், சொமட்டோ நிறுவனத்தோடு டேக் செய்கிறார். எனது 4 வயது  குழந்தை கேட்டிருப்பதைப் பாருங்கள், இதையெல்லாம் அவர்கள் எடுத்துவருவார்களா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன் என்று பதிவிடுகிறார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தனது மகன் பொம்மை காருடன் அவனது 8 மாத தங்கையுடன் விளையாடுவதை ட்விட்டரில் பதிவிடுகிறார். அவ்வளவுதான் ஒட்டுமொத்த நெட்டிசன்களும் சொமட்டோ நிறுவனத்தை பாராட்டி தள்ளிவிட்டார்கள்.

அந்தக் குழந்தைக்கு பொம்மை கார் வாங்கி தந்ததின் மூலம் கோடிக்கணக்கானவர்களில் உள்ளங்களில் அன்பை பரப்பி கடந்த கால தவறுகளை சரிசெய்துள்ளது சொமட்டோ நிறுவனம்.