பொதுவாக சாதாரண உணவகங்களில் உணவு உண்ணுவதற்கும் ஃபை ஸ்டார், ஃபோர் ஸ்டார் உணவகங்களில் உணவு உண்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு. ஆனால் சமீப காலங்களில் ஃபைவ் ஸ்டார், ஃபோர் ஸ்டார் ஹோட்டல்களில்கூட எதிர்பார்ப்பதைவிட அதிக தொகை கொடுத்து உணவு உண்ணவேண்டியுள்ளது.

மும்பையில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் வெறும் இரண்டு முட்டை மட்டும் 1700 விற்கப்படுவதை கண்டித்து கார்த்திக் தார் என்ற நபர் ட்விட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் நடிகர் ராகுல்போஸ், இரண்டு வாழைப்பழம் 442 ரூபாய்க்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் வாங்கியதை தொடர்ந்து மும்பையில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் தார் தன்னுடைய பில்லை படம்பிடித்து ட்விட்டரில் பதிவிட்டது மட்டுமல்லாமல்  ராகுல்போஸை டேக் செய்திருக்கிறார். தொடர்ந்து அந்தப் பதிவிற்கான எதிரொலியாக பலரும் தாங்கள் கொடுத்த அதிக பில்லை படம்பிடித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.