தமிழ் சினிமாவில் முக்கிய மூன்றெழுத்து நடிகரான தனுஷ் வரிசையாக படங்கள் நடித்துவருகிறார். ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘பட்டாஸ் என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் வெளிவந்த ஆயுஷ்மான் குரானாவின் ‘ஆர்ட்டிகிள் 15’ என்ற படத்தை ரீமேக் செய்து தனுஷ் தயாரித்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலரின் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தை தமிழில் கொண்டுவருவதற்கு தனுஷுக்கு தனி துணிச்சலே வேண்டுமென்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்தபடத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற செய்தியும் கிடைத்துள்ளது. இதில் நடிக்கத்தான் தற்போது மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற ஜோஜு ஜார்ஜ் படக்குழுவில் இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் தனுஷுக்கு ஒரு பலமான வில்லனாக அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.