விழா காலங்களில் சினிமாவுக்குச் செல்வது என்பது தமிழ் மக்களின் பிரத்யேக குணங்களில் ஒன்று, உச்ச நடிகர்களின் பெரும்பாலான படங்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தமிழ் மக்கள் கொண்டாடும் பண்டிகை நாட்களில் வெளியாவதும் வழக்கம்.

இந்நிலையில், 2020 பொங்கல் பண்டிகையில் ரஜினி நடித்து முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் ரிலீஸாக இருப்பதாக லைகா நிறுவனம் முன்னமே தெரிவித்திருந்தது. மேலும், தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் பட்டாஸ் திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நகைச்சுவை நடிகர் சிவா தற்போது திரைக்கதை, வசனம் எழுதி சுமோ என்றொரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இந்த படத்தை எஸ்.பி. ஹோசிமின் இயக்குகிறார். இந்த படமும் 2020 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

ஏற்கனவே தர்பார் ஆக்ஷன் படமென்று இயக்குனர் தரப்பிலிருந்து அறிவித்திருந்தார்கள், சிவா நடிக்கும் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருக்கபோகிறது ஒட்டுமொத்தமாக இந்த வருடம் பொங்கலுக்கு அதிரடி ஆக்‌ஷன் நகைச்சுவை கலந்த திரைப்படங்கள் வெளியாகி மக்களை சந்தோஷப்படுத்த உள்ளன