‘உறியடி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முதல் படத்திலேயே மிகப்பெரிய அடையாளத்தை பெற்ற விஜய் குமார் தற்போது ‘உறியடி – 2’ திரைப்படத்தை முடித்திருக்கிறார்.

2D எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்தின் வெளியீடு வருகின்ற மே 17-ஆம் தேதிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி சுவாரஸ்யமான திரைக்கதையால் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘உறியடி’. குறைந்த பட்ஜெட்டில் தரமான வெகுஜன சினிமாவை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையையும் இப்படம் ஏற்படுத்தியதாக பலர் கருத்து கூறியிருந்தனர்.

இதனை தொடர்ந்து தொடங்கப்பட்ட ‘உறியடி – 2’ திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரிப்பதாக முடிவானது. தற்போது இதன் பணிகள் நிறைவுப்பெற்றதை தொடர்ந்து அதிகாரபூர்வமாக வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.