செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே. படம் வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது. செல்வராகவன் சூர்யா இணையும் முதல் படம் என்பதால் படத்தை கொண்டாட சூர்யா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் என்.ஜி.கே. படத்திற்கு எமோஜி அளித்துள்ளது ட்விட்டர். எமோஜி கொடுத்த ட்விட்டர் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் சூர்யா. சூர்யா ரசிகர்கள் எமோஜி கிடைத்ததில் ட்விட்டரை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமான செல்வராகவன் படம் போன்று இல்லாமல் என்.ஜி.கே. வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் இந்தப் படத்திற்காகத்தான் நெடுநாட்களாகவே சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அவ்வப்போது படத்தின் டீசர், ட்ரைலர் பாடல் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருப்பதால் இப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல வசூலை பெற்றுத்தரும் என்று கோல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக விஜய் நடித்த மெர்சல் படத்திற்கும், ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் எமோஜி அளித்தது ட்விட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.