தனது படங்கள் வெளிவரும்போது டிவிட்டரில் சில பதிவுகளை பதிவிடும் தனுஷ், தற்போது உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் சீரிஸ் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றி தனது பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

மிகவும் சோகமாக காணப்படும் அந்தப் பதிவில், “ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது” என தனுஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும், “கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீசன் கடைசி எபிசோட் முடிவடைந்துவிட்டது. மிகவும் பொழுதுபோக்காக புதுமையாக இதனை தந்தவர்களுக்கு மிகவும் நன்றி” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக 8 சீசன்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த சீரிஸ் தற்போது முடிவடைந்துள்ளது. உலகம் முழுவதும் இது தொடர்பாக ரசிகர்கள் சோகமான பதிவிட்டு வரும் நிலையில், தனுஷும் தன் பங்குக்கு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தனுஷின் இந்தப் பதிவைக் கண்ட அவரது ரசிகர்கள், ‘உங்களின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் இருந்தால் சொல்லுங்களேன்’ என அவரிடம் கேட்டுள்ளனர்.

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பகிர் படம் பக்கிரி என்ற தலைப்பில் அடுத்த மாதம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.