டாப்ஸி முதன்மையான பாத்திரத்தில் நடிக்கும் ‘கேம் ஓவர்’ படம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் டீஸர் 15-ஆம் தேதி (நாளை) பிற்பகல் 12 மணிக்கு வெளியாகுமென அறிவித்துள்ளனர்.
மாயா, இறவாகாலம் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
படம் உருவாகும் நிலையிலேயே இதன் இந்தி வெளியீட்டு உரிமையை இயக்குநர் அனுராக் காஷ்யப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.