றுதிச்சுற்று’ படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் சூர்யாவின் படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ், சில முக்கிய தகவல்களை ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்து பேசியுள்ள ஜி.வி. பிரகாஷ், இதுவரை என் படங்களில் இடம்பெறாத புதுமையான இசையை இப்படத்தில் உணரலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘என்.ஜி.கே’ (NGK) வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து மீண்டும் கே.வி. ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தில் சூர்யா நடிக்கிறார்.

இதன் பின்னரே சுதா கொங்கரா இயக்கும் சூர்யா படம் உருவாகிறது. முன்னணி நடிகராகவும் வலம்வரும் ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இதுவே ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் முதல் சூர்யா படம் என்பது குறிப்பிடத்தக்கது.