சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்து அஜித் – நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து இமான் இசையமைத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் தினத்தன்று விஸ்வாசம் திரைப்படம் வெளியானது.

குடும்பக்கதையான இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பெருவாரியான மக்கள் கண்டுகளித்தனர். படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. வருடத்தில் அதிக வசுல் செய்த படங்கள் பட்டியலில் இந்தப்படமும் இடம்பெற்றது.

இந்நிலையில் 2019-ம் ஆண்டில் அதிகம் பிரபலமான ஹேஷ்டேக்குகளில் விஸ்வாசம் படத்துக்கு முதலிடம் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர், “இந்த ட்வீட்டை பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. ஆனால் இது இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றுதான். 2019-ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது. உண்மையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேஷ்டேக் தினத்தன்று ட்விட்டர் இந்தியா பக்கத்தில் பதிவிட்ட ட்வீட்டில், ஜனவரி 1 முதல் ஜூன் மாதம் இறுதிவரை விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றிருப்பதாக வெளியான தகவலை அறிந்த இசையமைப்பாளர் டி.இமானும் அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.