கடைசியாக ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கிய மோகன் ராஜா, அடுத்து ‘தனி ஒருவன் 2’ உருவாக்கத்துக்கான திட்டமிடலில் இருக்கிறார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ‘தனி ஒருவன் 2’ குறித்து டீவீட்டரில் மோகன் ராஜா ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
‘தனி ஒருவன்’ திரைப்படத்தை மீண்டும் பார்த்துவிட்டு, இயக்குநர் ராம் அனுப்பிய பாராட்டு செய்தி மோகன் ராஜாவின் டீவீட்டில் உள்ளது.
அதில், ‘அடுத்த பாகத்தை கவனமாக உருவாக்குங்கள்’ என்று ராம் கூறியதையும், உதவி இயக்குநர்கள் அதற்காக உற்சாகத்துடன் பணியாற்றுவதையும் குறிப்பிடும் வகையில் மோகன் ராஜா எழுதியுள்ளார்.