இன்னும் தலைப்பிடப்படமால் பரபரப்புடன் நடைபெற்றுவரும் புதிய தனுஷ் படத்தின் வில்லன் யார் என்பது தெரியவந்திருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் நடித்துவரும் தனுஷ், துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். ஒரேநேரத்தில் இரண்டு படப்பிடிப்புகளிலும் தனுஷ் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

இரண்டாவது முறையாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தில், தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா வில்லனாக நடிப்பது தெரியவந்திருக்கிறது.

இதுபற்றிக் கூறியிருக்கும் தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா, “தனுஷ் படத்தில் நான் நடிக்கும் காட்சிகளின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.