ழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான சாயிஷா, ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்த ‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இவர் தற்போது சூர்யாவுடன் ‘காப்பான்’ திரைப்படத்தில்  நடித்து முடித்திருக்கிறார். இவருக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் கடந்த மார்ச், 10ஆம் தேதி ஹதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சாயிஷா தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

இதுகுறித்து சாயிஷா கூறுகையில், “ஆர்யாவை நான் கரம் பிடித்ததில் நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளோம். நடிப்பிற்கு திருமணம் ஒரு தடையில்லை. தொடர்ந்து நடிப்பதுப் பற்றி முடிவெடுக்க ஆர்யா எனக்கு முழு சுதந்திரமும் உரிமையும் கொடுத்துள்ளார். எனவே நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். கதாநாயகர்கள் படம், தனி தனியாக என வித்தியாசமான படங்களில் எப்பொழுதும்போல நடிப்பேன். திருமணத்திற்கு பின்பும் நடிப்பதில் சமந்தா, ஜோதிகா ஆகியோர்தான் எனக்கு முன்னுதாரணம்” என்று தெரிவித்தார்.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும்  ‘டெடி’ என்ற புதிய படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சாயிஷாவை கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகின்றது.