ண்டைக்கோழி 2′ எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத சூழலில் விஷால் தற்போது ‘அயோக்யா’ படத்தில் முழுகவனம் செலுத்தி வருகிறார். ஆக்ஷன் திரில்லர் வகைமையில் உருவாகும் ‘அயோக்யா’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அயோக்யா படத்தைப் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மூன்றாவதுமுறையாக மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார். விஷாலின் மற்றொரு புதிய படத்திலும் முக்கிய பாத்திரத்தில் தமன்னா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் விஷால் – அனிஷாவின் திருமண நிச்சயதார்த்தமும் ஹைதராபாத்தில் இன்று(16.03.2019) நடைபெற்று முடிந்திருப்பதால் விஷால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.