ட்லீ இயக்கத்தில் விஜய்-நயன்தாரா ஜோடியாக நடிக்கும்  விஜய்63 படம்  தீபாவளி வெளியீடாக வர உள்ளது. இதன் படப்படிப்பு தளத்தில் பங்கேற்ற விஜய்யின் வீடியோ சமீபத்தில் வைராலான நிலையில் தற்போது அப்படத்தின் நாயகியான நயன்தாரா, தன் ரசிகர்களை பார்த்து கை அசைத்த வீடியோவும் வைராலாகி வருகின்றது.

‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களை அடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் விஜய்63.  இப்படத்தின் தலைப்பு இன்னும் வெளிவராத நிலையில், இப்படம் விளையாட்டை மையமாக கொண்ட படமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகின்றது. இதில் யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி, விவேக் மற்றும் ஆன்ந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்தினை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கின்றது.