தமிழ்த் திரைப்படங்களில் கிராமத்துக் கதாப்பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நெப்போலியன். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்தும் புகழ்பெற்றவர். தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் இவர் ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். சாம் லோகன் கலேகி என்பவர் இயக்கத்தில் டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் த நெய்ன் ரோக் (Devil’s Night: Dawn of the Nain Rouge) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அருங்காட்சியக மேற்பார்வையாளராக நடித்துள்ளார். இப்படத்தின் சில புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.