2019 மக்களவை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை அறிவித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

அதிமுக கூட்டணியில், பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வரும் மக்களைவை தேர்தலை சந்திக்கவுள்ளது. இதில், அதிமுக 20 தொகுதிகளிலும், பாமக 7 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்நிலையில், தேமுதிக போட்டியிடவுள்ள 4 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று
(மார்ச் 18) வெளியிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி – எல்.கே.சுதீஷ்

திருச்சி – டாக்டர் இளங்கோவன்

விருதுநகர் – அழகர்சாமி

வடசென்னை – அழகாபுரம் மோகன்ராஜ்