“என்னை ஏன் பெற்றீர்கள்?” என  பெற்றோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக ஆண்ட்டிநாட்டலிஸம் மீது ஈர்ப்பு உள்ள மும்பையை சேர்ந்த  ரபேல் சாமுவேல்  என்பவர்  தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

பெற்றோர் சம்பாதித்த சொத்துக்களில் பங்கு வேண்டும் மற்றும்  வேறு பல காரணங்களால் வழக்கு தொடர்வதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தன்னை ஏன் பெற்றார்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் இந்த  ஆண்டிநாட்டாலிசவாதி  ரபேல் சாமுவேல்.  27 வயதான இவர் ஆண்டிநாட்டலிஸம் என்ற முற்போக்கு சிந்தனையை உடையவர்.  இனப்பெருக்கம் என்பது பூமிக்கு தேவை இல்லாத செயல் என்பதே இச்சிந்தனை ஆகும்.  இதை சொல்வதோடு மட்டுமில்லாமல் ஒரு இயக்கமாகவே உலகம் முழுவதும் ஆண்டிநாட்டாலிசத்திற்கான  செயற்பாட்டாளர்களும் உள்ளனர்.

 

பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சி  மற்றும் தேவைக்காக  குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். எனவே , அவர்களின் முடிவுக்காகவும் அவர்களின் ஆசைக்காகவும் பிள்ளைகளை பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது முற்றிலும் தவறான ஒன்று என்பதனை  இச்சிந்தனை கூறுகின்றது.

 

 

“பூமியில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தங்களின் வாழ்வை அனுபவிக்க வேண்டும். அந்த கனவு பெற்றோர்களின் ஆசைக்காக அழிய நேரிடுகிறது. பெற்றோர்களின் கனவை பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் என பிள்ளைகளை கட்டாயப்படுத்துவது தவறு.  குழந்தைகளின் விருப்பம் அறிந்து அவர்களை வாழ அனுமதிக்க வேண்டும் ,” என்கிறார் ரபேல்.

 

 

“நான் என் மகனின் சிந்தனையை மதிக்கிறேன், ஆனால் எங்கள் மீது அவன் தொடரவுள்ள வழக்கை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம். நாங்கள் இருவரும் வழக்கறிஞர்தான். சாமுவேல் தன கருத்திற்கு தெளிவான விளக்கம் அளித்தால் , நாங்கள் எங்கள் தவறு என்ன என்பதை புரிந்து கொள்வோம். அவன் தனக்கான சிந்தனையோடு துணிச்சகளாக நிற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று சாமுவேலின் தாயார் அவர்கள் சாமுவேலின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

“உங்கள் குழந்தையிகள் உங்களால் தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல ,” என்ற கலீல் ஜிப்ரானின் ஒருவரி  கவிதைமூலம் நமக்கும் உலகிற்கும் நீதிமன்றத்தின் வாயிலாக எடுத்துக்கூற உள்ளார் ரபேல் எனலாம்.