நிலவின் உட்பகுதியில் ஏற்பட்ட குளிர்ச்சியின் காரணமாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 150 அடிவரை நிலவு சுருங்கியுள்ளதாகவும் நாசாவின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நிலவின் மேற்பரப்பை ஆய்வுசெய்ய அப்பல்லோ 11, அப்பல்லோ 12, அப்பல்லோ 14, அப்பல்லோ 15 மற்றும் அப்பல்லோ 16 ஆகிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் அப்பல்லோ 11 மட்டும் மூன்று வாரங்களில் செயலிழந்துவிட்டது.

இந்நிலையில் நாசா நிறுவனத்தின் லூனார் ரெக்கொனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) (LRO) எடுத்தப் புகைப்படங்களை, திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.  அதில் நிலவின் நிலப்பரப்பு மேற்பகுதியில் மடிப்புமடிப்பாக சுருக்கங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.  இவை நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கங்களால் ஏற்பட்டவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

நிலவில் வட துருவத்திற்கு அருகில் உள்ள மேரே ஃப்ரிகோரிஸ் என்ற இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளாக நாசா நிறுவனத்தால் சுமார் 12,000-க்கு மேற்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.

இதில் நிலவின் உட்பகுதியில் 50 மீட்டர் தொலைவுக்கு குளிர்ச்சியாக காணப்படுகிற்து. இதனால் நிலவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதோடு மேல்பகுதியில் மடிப்பு போன்ற அமைப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான நிகோலஸ் ஸ்ச்மேர் (Nicholas Schmerr) கூறுகையில், “இன்றும் இந்த நில அதிர்வுகள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, “நிலவு சீராக குளிர்வடைந்து வருவதால்  நிலவின் சில பகுதிகள் சுருக்கம் ஏற்பட்டிருக்கின்றன என தகவல் கிடைத்துள்ளது. அவை 5 ரிக்டர்வரை இருக்கக்கூடும்” என ஸ்மித்சோனியன் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் பூமி மற்றும் கிரக ஆய்வுகள் மையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணிபுரியும் தாமஸ் வாட்டர் தெரிவித்தார்.