எழுதியவர்கள்: அபிநாஷ் போரா, சபியாசாச்சி தாஸ், அபராஜிதா தாஸ்குப்தா, அஸ்வினி தேஷ்பாண்டே, கனிகா மகாஜன், பாரத் ராமசாமி, அனுராதா சஹா & அனிஷா சர்மா

( இந்த கட்டுரையின் ஆசிரியர்கள் பொருளாதாரத் துறை, அசோகா பல்கலைக்கழகம் மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார தரவு மற்றும் பகுப்பாய்வு மையத்துடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.)

ஒரு தொற்றுநோய்  பெரிய இந்தியாவின் மக்கள்தொகையை வாழ்வாதாரம் இல்லாத ஆரோக்கியமற்றவர்களாக விட்டுவிட்டால், அது பல ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சித் திறனை பாதிக்கும்.

இந்தியாவில் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த முதல் கட்டம் 40 நாட்கள் நீடிக்கும். இது உலகளவில் மிகவும் கடுமையான  ஒன்றாகும். கோவிட் -19 ஆல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் உட்பட 73 நாடுகளின் சர்வதேச ஒப்பீட்டில், நிதி நெருக்கடி அல்லது நிதி இறுக்கத்தில் இந்தியா அதிகபட்சமாக 100 மதிப்பெண்களைப் பெறுகிறது. மற்றொரு சர்வதேச ஒப்பீடு, இந்தியாவில் நிதி நெருக்கடி மிக அதிகமாக இருக்கும்போது, ​​மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% மட்டுமே பாதுகாப்பு கொள்கைகளுக்கு  செலவிடப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் நோயின் எதிர்காலப் பாதை எங்களுக்குத் தெரியாது (வெவ்வேறு மாதிரிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும் வகையில் மதிப்பீடுகளை வழங்குகின்றன), ஆனால் சில மறுக்கமுடியாத உண்மைகள் உள்ளன. தொற்றுநோய் கொடியது என்பதை நாங்கள் அறிவோம், அதைக் தடுக்க வேண்டும். ஒரு தடுப்பூசி உருவாக்கப்படுவதற்கு குறைந்தது 18 மாதங்களும் அதை அளவிடவும் தயாரிக்கவும் இரண்டு ஆண்டுகளும் ஆகும். இதற்கிடையில், ஊரடங்கு நோயின் பரவலை மட்டுமே தடுக்கின்றன, அதை முழுவதுமாக அகற்றாது.

மில்லியன் கணக்கான இந்திய குடும்பங்களுக்கு, எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல், கடுமையான ஊரடங்கு நீட்டிப்பு, அவர்களின் அடுத்த உணவைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையையும் கவலையையும் காலவரையின்றி நீடிக்கும். அவர்களின் அடுத்த வேளை உணவு இயங்குவதற்கான சுதந்திரம்  உடன் தொடர்புடையது மட்டுமல்ல , முக்கியமாக, அவர்களுக்கான வருமானம் குறித்தது.

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, சூரத் மற்றும் மும்பையில்  பெருமளவில் புலம்பெயர்ந்த மக்கள் வீட்டிற்கு செல்வதில் ஆச்சரியமில்லை. ஊரடங்கு அறிவித்த நேரத்தில் புலம்பெயர்ந்தோரின் நீண்ட அணிவகுப்பு  அவர்களை  கடுமையான கஷ்டங்களுக்குள்ளாக்கியது, சிலர் வீடுகளை அடைந்தனர் பலர் பல்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு ஆரம்ப நாட்களில், நாங்கள்  கண்ட குழப்பம், பீதி மற்றும் பதட்டம் போன்ற காட்சிகளைத் தடுக்க ஊரடங்குக்கு முன்கூட்டியே உறுதியான நடவடிக்கைகளை அறிவிக்க அரசாங்கங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று நாங்கள் வாதிட்டோம்.

துரதிர்ஷ்டவசமாக, இதுவரை கிடைத்த சான்றுகள் மிகவும் நம்பிக்கைக்குரியவை அல்ல, மேலும் நமது ஆரம்பகால அச்சங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் வெளிவந்தவை. பல்வேறு ஆய்வுகள் பொருளாதார நெருக்கடிகளின் பல பரிமாணங்களைக் தெரிவிக்கின்றன, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவரை கிடைத்த சான்றுகள், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தங்களது உரிமைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை, அல்லது பட்டினியின் விளிம்பில் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உரிய, பெறக்கூடிய நிவாரணங்களை இன்னும் வழங்கப்படவில்லை.

கொள்கைகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்

உலகளாவிய தொற்றுநோயை வரையறுக்கும் அம்சங்களில் ஒன்று அதனுடன் தொடர்புடைய அடிப்படை நிச்சயமற்ற தன்மை. இந்த கடினமான காலங்களில், அரசாங்கம் மேலும் நிச்சயமற்ற தன்மையைச் சேர்க்காமலிருப்பது இன்னும் முக்கியமானது. இதை நாங்கள் முதலில் எழுதியபோது, ​​இது வெளிப்படையானது, கிட்டத்தட்ட சாதாரணமானது என்று தோன்றியது, ஆனால் இது தேசிய அளவில் கொள்கை அறிவிப்புகளிலிருந்து தொடர்ந்து காணாமல் போவதால், முன்பே நிறுவப்பட்ட, முன்னோக்கிப் பார்க்கும் கொள்கை கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை மீண்டும்  மீண்டும் செய்ய நிர்பந்திக்கப்படுகிறோம். பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை  கொள்கை கட்டமைப்பு உறுதிசெய்ய வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஊரடங்கு ஏற்பட்டால் மக்கள்தொகையின்  பெரும்பகுதி அடையும் பொருள்கள் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள் குறித்து கொள்கைகள் விரிவான பார்வையை கொண்டிருக்க வேண்டும்,  . பற்றாக்குறையின் பொருளாதார விளைவுகள் மக்களை பலவீனமாக்குவது போலவே, அதற்கு இணையான  உளவியல் சேதங்களும் இருக்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த 24 மாதங்களில் நடக்கும் எந்தவொரு ஊரடங்கு உத்தரவின் போதும் மக்களுக்கு ரொகப்பணம் தருவது மற்றும் சமூக நலத்திட்டங்களுடன் ஒரு விரிவான அணுகுமுறையை நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்த அரசாங்கத்தின் பல நிலைகளில் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. தற்போதைய தொற்றுநோய்க்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் எந்தவொரு தொற்றுநோய்க்கும் அரசாங்கத்தின் செயல்படும் விதத்தை நிர்வகிக்க ஒரு வலுவான நிறுவன உள்கட்டமைப்பு வைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். இதற்கு உண்மையான கூட்டாட்சி தேவைப்படுகிறது. அங்கு பல்வேறு மாநிலங்களின் தேவைகள் புறநிலையாக மதிப்பிடப்படுகின்றன, அவற்றின் அரசியல் தொடர்பைக் குறிக்கவில்லை.

உண்மையில், மத்திய அரசுக்கு முற்றிலும் மாறாக, சில மாநிலங்கள் இந்த பெரிய நெருக்கடியைச் சமாளிப்பதில் குறிப்பிடத்தக்க முறையில் செயல்பட்டுள்ளன,  கிட்டத்தட்ட மத்திய அரசின் எந்த உதவியும் இல்லாமல்அவை கடுமையான நிதிக் கட்டுப்பாடுகளின் கீழ் செயல்படுவது சவாலாக உள்ளது. தீவிரச் சோதனை, தொடர்புத் தடமறிதல் மற்றும் நோய் தொற்றை முழுமையாக நிறுத்தும் நடவடிக்கைகளுடன் கேரள மாதிரி முன்மாதிரியான வெற்றியைக் காட்டியுள்ளது, இதில் சமைத்த உணவை வழங்கி யாருன் பட்டினி கிடப்பதில்லை என்பதை உறுதியும் செய்கின்றனர்.  மற்றொரு வெற்றிக் கதையான ஒடிசா, ஏழைகள் வங்கிகளுக்குச் செல்லாமல் அல்லது வங்கி தொடர்புகளை சாராமல் எவ்வாறு பணத்தை விநியோகிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

முக்கிய பரிந்துரைகள்

பலவிதமான பரிந்துரைகள் உள்ளன – முன்னணி சுகாதார ஊழியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான வசதிகள், சேவை வழங்குவதற்காக உள்ளூராட்சி அமைப்புகளைப் பயன்படுத்துதல் போன்றவை.  உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது – நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். நீண்ட கால வழிமுறைகளுக்கான எங்கள் முக்கிய பரிந்துரைகளை நாங்கள் கோடிட்டுக் காட்டுகிறோம்.

எங்கள் மிக முக்கியமான பரிந்துரை என்னவென்றால், பணம் மற்றும் உதவிகளுக்கு மாற்று இல்லை.  உணவு அல்லாத பொருட்களை வாங்கப்  பணம் தேவை.   ஊரடங்கின் போது பெரும்பாலும் பதுக்கல், விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள் மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் ஆகியவை இருப்பதால், பணமும் உதவிகளும்  ஒன்றுக்கொன்று பதிலியாக இல்லாமல் இணையாக செயல்படும்.  இந்த மாற்றங்கள் உண்மையில் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதை உறுதி செய்வதற்காக, அத்தியாவசிய பொருட்களின் ஓட்டத்தை பராமரிக்க விநியோக சங்கிலிகளை நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பொது விநியோக முறை உலகளாவியதாக இருக்க வேண்டும் மற்றும் பி.டி.எஸ் கடைகளின் பங்கை விரிவுபடுத்த வேண்டும். தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் தவிர, இந்திய வீடுகளுக்கு அத்தியாவசியமான உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு போன்ற காய்கறிகளும் நியாயமான விலை  கடைகள் மூலம் முடிந்தால் குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டும். ஊரடங்கு கடுமையாக அமுலில் இருக்கும்போது பொது விநியோக அமைப்பு கடைகளுக்கு செல்வது  கடினம்,  பொது வினியோக கடை வாகங்கள் மூலம் வீட்டு வாசலில் பொருட்களை வழங்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக உணவுப் பொருள் மண்டிகள் தங்கள் வினியோக முறைகளை மாற்ற வேண்டும். தற்போதைய வினியோக வாகனங்களை பல்வேறு சிறிய பல தளங்களுக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களாக மாற்றியமைக்க வேண்டும். நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஒரு தளத்தில் அனுமதிக்கப்பட்ட லாரிகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இருக்கலாம். அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை சேர்க்க கோவிட் -19 சோதனை நெறிமுறை விரிவாக்கப்பட வேண்டும். அவர்கள் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதால் சமூகப் பரவலைக் குறைக்க தொடர்ந்து சோதிக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் மிகவும் குறைவாக இருக்கிறதா? மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஐ நாங்கள் செலவழிக்கிறோம், நிச்சயமாக, ஆம். பொருளாதாரம் அரிதாகவே செயல்படும்போது, ​​மக்களுக்கு உணவளிப்பதும் படிப்படியாக தேவையை உயர்த்துவதும் முன்னுரிமை உடையவை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% -6% பாதுகாப்புக்காக வழங்கவும், பொருளாதார நடவடிக்கைகளை விரைந்து செய்யவும் அரசாங்கம் செலவிட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

பிறந்த குழந்தைகளின் நீண்டகால சுகாதார பராமரிப்பு மிகவும் முக்கியமானது என்றும், கர்ப்பிணிப் பெண்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு மையங்களுக்கான அணுகல் ஊரடங்கின் போது கிராமப்புறங்களில் ஒரு முக்கிய கவலையாக வெளிப்பட்டுள்ளது. ஏனெனில் சில போக்குவரத்து முறைகளே உள்ளன. கர்ப்பிணிப் பெண்களின் தேவைகளுக்கு செயல்பாடும் தொகுதி மட்டத்தில் சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டு, அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு கொண்டு செல்ல பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் ஆம்புலன்ஸ்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆரம்பகால குழந்தை பருவ ஊட்டச்சத்து குறைபாடு ஏற்கனவே இந்தியாவில் பரவலான சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது, இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் தனிநபர்களுக்கு நீடித்த தாக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் குழந்தைகள் சத்தான உணவை அணுகுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்தடை சாதன உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படுவதால் கருத்தடைக்கான அணுகுமுறைகள் குறைக்கப்படுவது மற்றொரு கவலை. முந்தைய ஆராய்ச்சிகளில் இயற்கை பேரழிவுகள் பிரசவ விகிதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்தன, இது குழந்தைகள், குறிப்பாக பெண்களுக்கான செலவீனம், வருங்கால முதலீடுகள்  குறைதல், மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் போன்ற குறிப்பிடத்தக்க சவால்களுக்கு வழிவகுக்கிறது.

ஊரடங்கின் போது குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதன் மூலம் பெண்களின் உயிருக்கு இன்னும் நேரடி ஆபத்து உள்ளது. துயரத்தில் இருக்கும் பெண்களை  கண்டறிவதும் அத்தியாவசிய சேவையாக காவல்துறையினரால் வகைப்படுத்தப்பட வேண்டும்,  மிக அவசரமாகவும் நடத்தப்பட வேண்டும்.

இந்த தொற்றுநோய் இனவெறி மற்றும் வகுப்புவாத வெறுப்பின் அசிங்கமான, தீய வெளிப்பாடுகளைக் கண்டிருக்கிறது.  இது பரவுவதற்கு முக்கிய ஊடகங்கள் தீவிர பங்கெடுத்துள்ளன. அரசாங்க இயந்திரங்கள், குறிப்பாக காவல்துறை, பாகுபாட்டைத் தடுக்க தீவிரமாக விழிப்புடன் இருக்க வேண்டும், மேலும் அவர்களின் சாதி, மதம், அல்லது பழங்குடியினர் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் நிவாரணம், உதவி மற்றும் பொருட்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

பின்னர் தொற்றுநோய் ஒரு நாள் குறையும், ஆனால் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை இழப்பதால் ஆரோக்கியமற்ற ஒரு பெரிய மக்கள் தொகையை அது விட்டுவிட்டால், அது வரவிருக்கும் பல ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி திறனை மோசமாகப் பாதிக்கும். தடையற்ற மதவெறி புதிய முறையில் வளர அனுமதிக்கப்பட்டால், இதன் காரணமாக ஏற்படும் பாகுபாடு இந்தியாவின் பரந்த அளவிலான உற்பத்தித்திறனை அழிக்கவும்   தவறான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

நாம் கடுமையான உடல்நலம் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடும்போது, ​​மானுடபாது

காப்பை மையமாகக் கொள்ள வேண்டும். மனிதர்களின் துன்பத்தைத் தணிக்கும் நோக்கில், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஒரு நீண்டகால கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரே வழி இதுதான்.

தமிழில்: கோகுல கிருஷ்ணன் கந்தசாமி

நன்றி:

https://scroll.in/article/959413/as-india-battles-a-grave-health-and-economic-crisis-it-must-put-humanity-centrestage