சுவீடன் நாட்டைச் சேர்ந்த க்ரெட தன்பெர்க் என்ற 16 வயதுச் சிறுமி, பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலை எதிர்த்து சுவீடன் பாராளுமன்றத்தின் முன் போராடி, தற்போது நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு  அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தன் பள்ளி வகுப்புகளைப் புறக்கணித்து பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகியவற்றிலிருந்து பூமியைக் காப்பாற்ற வேண்டும் எனவும், அவற்றை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதனையும் க்ரெட தன்பெர்க் வலியுறுத்தி வந்துள்ளார். இவர் தற்போது, இனி  பருவநிலை மாற்றத்தினால் எந்தவித ஆபத்துகளும் நிகழாமல் இருக்க அரசு வழிவகைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து சுவீடன் நாட்டுப் பாராளுமன்றத்தின்முன் போராடி வருகின்றார்.

இவர், செப்டம்பர் 2018ல் சுவீடனில்  நடைபெற்ற பொது தேர்தலை அடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன் வகுப்புகளைப் புறக்கணித்து பாராளுமன்றத்தின்முன் உட்கார்ந்து போராடி வருகின்றார். கடந்த ஒரு வருடத்திற்க்குள் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் பங்கேற்று தூய்மையான பூமி பற்றி உரையாடியுள்ளார். கடந்த ஜனவரி,2019ல் டோவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பேச இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இவர் 2018ல் உலகின் 25 செல்வாக்குள்ள இளைஞர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பங்கேற்ற க்ரெட தன்பெர்க், “நாங்கள் போராடுவது எங்கள் வருங்காலத்திற்காக மட்டுமல்ல; இங்குள்ள அனைவரின் எதிர்காலத்திற்காகவும்தான்” என்றார்.

இவர் தற்போது நரேந்திர மோடிக்கு ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்: “இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களே! இதேபோன்று வணிக வளர்ச்சி மற்றும் அதன் வெற்றிகளைப் பற்றி புகழாரம் பாடி வந்தீர்கள் என்றால், நீங்கள் கூடிய விரைவில் தோற்றுவிடுவீர்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

வீடியோ கிழே: