பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கும்வகையில், தமிழக காவல்துறை புதிதாக பிரிவு ஒன்றை இன்று (மார்ச் 16) தொடங்கியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள்மீது பாலியல்ரீதியான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு பொள்ளாச்சி சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. இந்நிலையில், தமிழக காவல் துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கும்வகையில், புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் கூடுதல் டிஜிபி தலைமையில் 3  எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும். சி.பி.ஐ, இன்டர்போலுடன் தொடர்புகொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தொகுப்பையும் இந்த அமைப்பு உருவாக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து,  தமிழக காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.