மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிய வறட்சி நிவாரண நிதியில் 4% நிதியை மட்டுமே வழங்கியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

2015-2018 ஆண்டு  வறட்சி நிவாரண நிதியாக தமிழக அரசு கோரிய 39,565 கோடி ரூபாயில் 1,748 கோடி அதாவது 4% மட்டுமே மத்திய அரசு வழங்கியிருப்பதாக  விவசாய புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 21,648 கோடி வறட்சி நிவாரண நிதியாக கேட்ட ராஜஸ்தானுக்கு 2,387 கோடியே 7 லட்சம் மத்திய அரசு வழங்கியது . 11,645 கோடி நிவார நிதியாக கேட்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 4,379 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. அதேபோல  கர்நாடக மாநிலம் கோரிய 13,261 கோடியில் 4,841 கோடி மட்டுமே வழங்கப்பட்டது .

 

2015- 2018 வரை மாநிலங்கள் மத்திய அரசிடம் 1,23,605 கோடியை வறட்சி நிவாரண நிதியாக கோரியிருந்த நிலையில் 23,190 கோடி ருபாய் மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற மாநிலங்களுக்கு வறட்சி நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்த போதிலும் தமிழக்கத்துடன் ஒப்பிடும் போது அவை கூடுதலாக நிவாரண நிதியை பெற்றுள்ளன என புள்ளிவிவரம் கூறுகின்றது.