மகாராஷ்ட்ராவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு மகாராஷ்ட்ரா அரசு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் விவரத்தை ஒரு கடிதம் மூலம் அனுப்பியது. இதில் கடந்த 2011-14 தேசியவாத காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 6268 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2015-2018 ஆண்டுக்கான இறுதி கணக்கெடுப்பின் படி 11,995 ஆக உயர்ந்துள்ளது, இந்த குறிப்பிட்ட நான்கு ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 91 சதவீதம் தற்கொலை செய்து கொல்லும் விவசாயிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

குறிப்பாக அமராவதி டிவிஷன் எனப்படும் விதர்பா பகுதியில் தான் அதிக தற்கொலைகள் நடந்துள்ளன, இங்கு மட்டும் சுமார் 5214 பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கு அடுத்தபடியாக அவுரங்காபாத் டிவிஷன் எனப்படும் மாரத்வாடா பகுதியில் 4699 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் “ஜிதேந்திர கட்கே” சமீபத்தில் என்.டி.டிவி.க்கு அளித்த பேட்டியில் “பெறும்பாலும் விவசாயிகள் கடன் சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும், கடன் கொடுத்தவர்கள் விவசாயிகளை அச்சுறுத்துவதால் ஏழ்மையின் கடனை திருப்பி தர முடியாத விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்து கொள்வதாகவும், இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்

மகாராஷ்ட்ராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது