2017-ல் வெளியான ஃபேண்டஸி காமெடி திரைப்படமான மரகத நாணயம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். ARK. சரவணன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
ஆதி, நிக்கி கல்கர்னி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த் என கலகலப்பான நட்சத்திர கூட்டம் மரகத நாணயம் படத்தில் நிறைந்திருந்தன. தெலுங்கிலும்கூட இது டப் செய்யப்பட்டிருந்தது.
இதன் பிறகு அதர்வா, பார்வதி நாயர் நடிக்கும் படத்தை ARK. சரவணன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பைத் தவிர பின்னர் அதுகுறித்து ஒரு தகவலும் இல்லை.
தற்போது மரகத நாணயம் புகழ் ARK. சரவணன் இயக்கும் படம் குறித்து ஒரு அட்டகாசமான தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்காக ARK. சரவணன் அடுத்து படம் செய்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.