‘உயர்ந்த மனிதன்’ திரைப்படம் மூலம் முதன்முறையாக தமிழில் நேரடியாக நடிக்கிறார் இந்தியாவின் முதன்மையாக நடிகர் அமிதாப் பச்சன்.

‘கள்வனின் காதலி’ திரைப்படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கும் இப்படத்தில் அமிதாப் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அமிதாப் பச்சனுடன் எஸ்.ஜே.சூர்யா இருக்கும் புகைப்படத்தோடு, இப்படம் குறித்த மற்றொரு முக்கிய தகவலும் வெளியாகியிருக்கிறது.

‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருபதே அந்த தகவல். தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ரம்யா கிருஷ்ணனின் பாத்திரம் பரவலாக பேசப்படும் நிலையில் அமிதாப்பச்சனுடன் அவர் நடிக்கும் தகவல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.