எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படம் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு ‘லாபம்’ என தலைப்பிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா இணைந்து ஏற்கனவே எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது மீண்டும் எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி. இதில் கலையரசன், ஜெகபதிபாபு உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். ராஜபாளையத்தில் இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.