விஜய் ஆண்டனி – அர்ஜுன் இணைந்து நடிக்கும் ‘கொலைகாரன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் வெளியான ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

படத்தை இயக்கியுள்ள ஆண்ட்ரீவ் லூயிஸ் தனது திறமையின் மூலம் தயாரிப்பாளர் தனஞ்செயனை வெகுவாக கவர்ந்திருக்கிறார். இதன் காரணமாக அவரது அடுத்த படத்தை தயாரிக்கவும் தனஞ்செயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் தனது முதல் படம் வெளியாவதற்கு முன்னரே இரண்டாவது பட வாய்ப்பை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இது கொலைகாரன் படத்தின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

விஜய் ஆண்டனி, அர்ஜுன், அஷிமா நர்வால், நாஸர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் ட்ரைலர் 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.