கத்தார் தலைநகர் தோஹாவில் நடைப்பெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு விஜய் சேதுபதி சார்பில் 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தொடர்ந்து பலர் வாழ்த்துகளையும், நிதியுதவியும் வழங்கி வருகின்றனர். அதிமுக சார்பில் இன்று 15 லட்சம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், விஜய் சேதுபதி சார்பாக அவரது ரசிகர்மன்ற நிர்வாகிகள் கோமதி மாரிமுத்துவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதோடு, நிதியுதவி வழங்கினர்.