உலக நடன தினமான இன்று ரசிகர்களைச் சிரிக்கவைக்கும் வகையில் நடிகர் சதிஷ் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் சதிஷ் வெளியிட்டிருக்கும் அந்த ‘நாட்டிய கணொளி’ பரவலாக பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
சிவா நடிப்பில் வந்த ‘தமிழ்ப்படம் 2’ காட்சிக்காக, படப்பிடிப்பில் நடனமாடிய காணொளியைதான் சதிஷ் இப்போது வெளியிட்டிருக்கிறார்.
இதனோடு, ‘உலக நடன தினத்துக்காக, நடன பேரிடி சிவாவுடன் அசுர ஆட்டம்’ என்று கூறி அந்த காணொளியை சதிஷ் பதிவிட்டுள்ளார்.