சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

தலைப்பிடப்படாமல் தொடங்கப்பட்ட இப்படத்தின் பெயர் இன்று மாலை வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டது. 4 மணிக்கு வெளியாகுமெனக் கூறியதால் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், திடீரென 4.30 மணிக்குத் தலைப்பு வெளியிடப்படுமென நேரத்தில் மாற்றம் செய்தனர்.

‘சூரரைப் போற்று’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதுவே அவர் இசையமைக்கும் முதல் சூர்யா படமாகும்.