ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் இன்று அதன் முக்கிய உறுப்பினர் ஒருவர் இணைந்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வந்தாலும் அதில் நயன்தாரா கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், இன்று ‘தர்பார்’ படப்பிடிப்பில் நயன்தாரா இணைவதாக இதனை தயாரிக்கும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ‘பேட்ட’ படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை இதன் மூலம் அனிருத் பெற்றிருக்கிறார்.