மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என சிவகார்த்திகேயனே கூறியதாக இயக்குநர் ராஜேஷ் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்துவரும் மிஸ்டர் லோக்கல் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ராஜேஷ்.M இயக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் மே 1-ஆம் தேதி வெளியாகிறது.

மிஸ்டர் லோக்கல் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ராஜேஷ், கதையைக் கேட்டுவிட்டு இதற்கு நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என சிவகார்த்திகேயன் கூறியதாக தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் மிஸ்டர் லோக்கல் படத்தில் நயன்தாராவின் பாத்திரம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.